தமிழ்நாடு

tamil nadu

பாடகர் பவன் சிங் மீது கல்வீச்சு

ETV Bharat / videos

பாடகர் பவன் சிங் மீது கல்வீச்சு.! - பாடகர் பவன் சிங்

By

Published : Mar 8, 2023, 9:20 AM IST

உத்தரபிரதேசம்:கடந்த 6ஆம் தேதி அன்று, பல்லியா மாவட்டம் நாக்ரா பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பாடகரும் நடிகருமான பவன் சிங் தாக்கப்பட்டார். அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாக்ரா பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாடகர் பவன் சிங், நடிகைகள் அஞ்சனா சிங் மற்றும் டிம்பிள் சிங் ஆகியோருடன் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, சில கும்பல் அவரது பாடல் ஒன்றை குறிப்பிட்டு அதனை பாடும் படி கூறியுள்ளனர். அப்போது அதனை பவன் சிங் மறுத்ததாகவும், அதனால் அந்த கும்பல் அவர் மீது கற்களை வீசியதாகவும், அதில் அவர் காயமடைந்ததாகவும் நாக்ரா காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் அவர் தாக்கப்பட்டதை அடுத்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து கல்வீசியவரை பிடித்த காவலர்கள், கலவரத்தை தடுத்து மக்களை அங்கிருந்து கலையச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு மேடையில் இருந்த பவன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு.! ஒருவர் பலி, ஆறுபேர் படுகாயம்  

ABOUT THE AUTHOR

...view details