நீ என்ன எடப்பாடி ஆதரவாளரா? அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்.. ரத்தம் சொட்ட சொட்ட பேட்டி.. - Attack on AIADMK executive
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரம் அடைந்த நிலையில், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்ட நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அப்போது ஜெயக்குமார் உடன் வந்த பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்துவை சிலர் தாக்கியுள்ளனர். அதன் பின் ரத்தம் சொட்ட சொட்ட வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், ஜெயக்குமார் கூட வந்த நீ என்ன எடப்பாடி ஆதரவாளரா? என கேட்டு சிலர் தாக்கியதாகத் தெரிவித்தார். மேலும், தாக்கியவர்கள் யாரென்றே தெரியவில்லை; அனைவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் போல இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST