ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி! - GI tag 2023
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆத்தூர், ராஜபதி, மாரந்தலை, வெள்ளக்கோவில், சுகந்தலை, மேல ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், வாழவல்லான், கொற்கை, உமரிக்காடு, முக்காணி ஆகிய கிராமங்களில் தாமிரபரணி நீர்ப் பாசனத்திலிருந்து சுமார் 500 ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்படுகிறது.
இதில் நாட்டுக்கொடி, பச்சைக்கொடி மற்றும் கற்பூரவள்ளி ஆகியவை ஆத்தூர் வெற்றிலையின் முக்கிய வகைகள் ஆகும். அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் வெற்றிலை ஒரு பிரதானமாக இடம் பெறுகிறது. பொதுவாக அறுவடை செய்யப்படும் வெற்றிலை கோடையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மற்றும் குளிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும்.
ஆனால் ஆத்தூர் வெற்றிலை எந்த காலநிலையிலும் ஏழு முதல் பத்து நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். இதனால் ஆத்தூர் வெற்றிலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆகையால் அப்பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா புகைத்து, கத்தியுடன் இன்ஸ்டாவில் வீடியோ பதிவு செய்த இளைஞர் கைது!