கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒளி பாய்ச்சும் விளக்கு கோபுரம் கோவில் மீது சாய்ந்தது - erode
ஈரோடு: கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8 அடி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அப்போது பலத்த மழை பெய்தது. மேடைக்கு இடது புறமாக உள்ள கோவில் முன் ஒளி பாய்ச்சும் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. காற்று வேகமாக வீசியதால் விளக்கு கோபுரம் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக கோவில் கோபுரம் மீது சாய்ந்ததால் எவருக்கும் பாதிப்பின்றி உயிர் தப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST