பழனி முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்! தங்கத்தேர் இழுத்து வழிபாடு!
Published : Dec 5, 2023, 9:50 PM IST
திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் என வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று (டிச. 5) மாலை பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு வருகை தந்தார். ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் தங்க தேரில் சுவாமி ரதத்தை இழுத்து வழிபாடு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் நடிகர் யோகி பாபுவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதன்பின் போகர் சித்தர் சமாதியில் வழிபட்டு பின்னர் ரோப் கார் வழியாக கீழே இறங்கி சென்றார். மேலும், நடிகர் யோகி பாபுவை கண்ட பக்தர்கள் பலரும் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இதையும் படிங்க:Koovam River: கரை புரண்டு ஓடும் தண்ணீர்..! கூவத்தைச் சுத்தம் செய்த மழை நீர்..!