தமிழ்நாடு

tamil nadu

சிதம்பர நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் விமரிசை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 4:28 PM IST

தம்பர நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்

கடலூர்:உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவைக் காண்பதற்காக இந்தியா மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அத்தகு பெருமைமிக்க ஆருத்ரா தரிசன விழா, கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, இன்று (டிச.26) வெகு விமர்சையாக நடைபெற்றது.

உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி அம்மாள், முருகர், சண்டிகேஸ்வரர், விநாயகர் என தனித்தனி தேரில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் உலா வந்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடியபடியே தேர் முன் சென்றனர். இத்திருவிழாவின் மற்றொரு நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை (டிச.26) நடைபெற உள்ளதால், கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் வந்துள்ளதால், மாவட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details