தமிழ்நாடு

tamil nadu

உலக முட்டை தினம்

ETV Bharat / videos

உலக முட்டை தினத்தில் சாதனை.. ஆரணி பள்ளி மாணவர்கள் அசத்தல்! - Arani School Students Achievement on World Egg Day

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:41 AM IST

திருவண்ணாமலை:ஆரணி அருகே தனியார் பள்ளியில், 'உலக முட்டை தினத்தை' முன்னிட்டு மாணவ, மாணவிகள் 2,500 முட்டைகளில் வர்ணம் பூசி, தலைவர்களின் படங்களை வரைந்து சாதனை படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சுந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று (அக்.13) ‘உலக முட்டை தினத்தை’ முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனியார் பள்ளி (Best Matriculation Higher Secondary School) மாணவ, மாணவிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமூக பாதுகாப்பு குறித்தும், முட்டை உட்கொண்டால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் பள்ளியில் பயிலும் 1,500 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து 2,500 முட்டைகளில் வர்ணம் பூசி, பாரதியார், திருவள்ளுவர், இந்தியா, பொம்மைகளின் உருவங்கள், இதயம், மரங்கள், இயற்கை காட்சிகள், தலைவர்களின் படங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களை வரைந்து சாதனை படைத்தனர்.

உலக முட்டை தினத்தை முன்னிட்டு மாணவர்கள் செய்த இந்த சாதனையை ‘கலாம் புக்ஸ்-ஆப் ரெக்கார்டு’ என்ற உலக சாதனை நிறுவனம் பதிவு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details