புதுக்கோட்டை: அந்தோணியார் கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
புதுக்கோட்டை:அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் அடைக்கலமாதா அந்தோணியார் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 9 காளைகள் பங்கேற்றுள்ள நிலையில் ஒரு குழுவிற்கு 9 வீரர்கள் என 9 குழுவில் 81 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு காளைகளை அடங்கினர். இதில் வெற்றி பெறும் குழுவினருக்கு ரொக்கப்பணம், தங்ககாசு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் 7 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர். அஜீத் என்ற மாடுபிடி வீரர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.