Kanjhawala death Case: டெல்லி அஞ்சலி மரண வழக்கு: முக்கிய சிசிடிவி வெளியீடு! - டெல்லி இளம்பெண் கார் விபத்து
டெல்லி: இளம்பெண் அஞ்சலி சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வழக்கில் மேலும் ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கிராரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து அஞ்சலி, நிதி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் புறப்படும் சிசிடிவி வெளியிடப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தை அஞ்சலி ஓட்டும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இரவு 7.10 மணிக்கு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக சிசிடிவி காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST