புனித வனத்து அந்தோணியார் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது - புனித வனத்து அந்தோணியார்
மயிலாடுதுறை: புனித வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஜன.7) தொடங்கியது. பங்குத்தந்தை அருட்திரு.ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட மூத்தகுரு அருட்திரு.ஜோசப் ஜெரால்டு அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித அந்தோணியார்களின் திருவுருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். வரும் 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் மறுநாள் காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST