தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'பொய் வழக்கை திரும்பப் பெறுக' கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..ரத்தான வகுப்புகள் - due to student protest

🎬 Watch Now: Feature Video

Etv Bharat

By

Published : Feb 22, 2023, 1:21 PM IST

கோவை:கோவை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மீது போட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நேற்று மதியம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரியில் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அரசு சட்டக்கல்லூரியில் 2 மாணவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் அதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் இடைநீக்க ஆணையை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். எல்எல்பி முடித்த மாணவர்கள் மாற்று சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், மாற்று சான்றிதழை தராததாகவும், மாறாக அவை தங்களிடம் இல்லை என கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாகவும் தெரியவருகிறது.

அதே கல்லூரியில் படிக்கும் ஹைரிதா என்ற மாணவியின் கணவரான சேக் முகமது கல்லூரி அலுவலகத்தில் சென்று இதுகுறித்து மாற்றுச் சான்றிதழ் தங்களிடம் இல்லை, அலுவலகத்தில் தான் உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் அப்போது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து ஹரிதா-சேக் முகமது தம்பதியினர் கல்லூரி முதல்வருக்கு, தங்களது மாற்றுச்சான்றிதழை கல்லூரி அலுவலகத்தில் நிர்வாகிகள் தொலைத்துவிட்டதாக புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டு பேரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் முதல் கல்லூரி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவர்கள் நேற்று இரவு முழுவதும் கல்லூரி வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் (பிப்.22)  போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கோவை சட்டக் கல்லூரி வளாகம் 'நிர்வாக காரணங்களை முன்னிட்டு இன்று அனைத்து பயிற்று வகுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது' அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details