தைப்பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி! - Tiruvannamalai Annamalaiyar Temple News
திருவண்ணாமலை:தைப்பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து சின்ன கடைவீதி, போளூர் சாலை, அவலூர்பேட்டை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய விதிகள் வழியாக வந்து ஈசானிய குளக்கரையில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் சூலத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், சீயக்காய் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஈசானிய குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூன்று முறை மூழ்கி எழுந்து தீர்த்தவாரி நடைபெற்றது.
மேலும், மாசி மாதம் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாபட்டில் தனது தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவிற்கு அண்ணாமலையார் திதி கொடுப்பது நடைபெறும்.
இதையும் படிங்க:தைப்பூச திருவிழா: சுவாமிமலை கோயிலில் கோலாகல கொண்டாட்டம்