அண்ணாமலையார் கோவில் நவராத்திரி நான்காம் நாள் விழா - நவராத்திரி நான்காம் நாள் விழா
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் மிக விமர்சையாக நடைபெறும். நான்காம் நாளில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ஸ்ரீ மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 16 வகை தீப ஆராதனை காண்பித்தனர். ஓதுவாமூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST