அண்ணாமலையில் வலது கையில் காயம் ஆனால் இடது கையில் பேண்டைடு.. வைரலாகும் பாஜக நிர்வாகி வீடியோ! - Bjp
Published : Sep 29, 2023, 10:03 AM IST
கோயம்புத்தூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையை கடந்த செப்.23ல் தொடங்கினார். சுமார் 2 கி.மீ நடந்து ஆனைமலை முக்கோணம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதை யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் வலது கை விரலில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதயாத்திரை ஆனைமலை முக்கோணம் பகுதியில் முடிவுற்று பிரச்சார வாகனத்தில் ஏறி பொதுமக்கள் இடையே உரையாற்றுவதற்கு முன்பு வலது கை விரல் பகுதியில் காயத்தைப் பார்த்து கை உதறினார். அதைப் பார்த்த மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேண்டைடு (Band-aid) எடுக்குமாறு தொண்டரிடம் கூறினார்.
உடனடியாக வாகனத்தில் இருந்த தொண்டர் பேண்டைடு எடுத்து முருகானந்தத்திடம் கொடுத்தார். முருகானந்தம் வலது கையின் விரல் பகுதியில் போடுவதற்கு பதிலாக இடது கையின் விரல் பகுதியில் போட்டு உள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.