தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலை பேட்டி

ETV Bharat / videos

"ஆளுநரை அவதூறாக பேசுவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்": அண்ணாமலை!

By

Published : Mar 9, 2023, 6:53 PM IST

சென்னை: பெங்களூரு செல்ல சென்னை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, "ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். 

எதனால் அந்த மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. ஏன் திருப்பி அனுப்பினார் என்று அரசு தெரிவிக்க வேண்டும். தவறான சட்ட முன்வடிவை ஆளுநர் கையொப்பமிட்டால் அதனை நீதிமன்றம் நிராகரித்து விடும். ஆன்லைன் சூதாட்ட மசோதா முக்கியமானது. ஆளுநர் கூறியுள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும். 

தமிழ்நாடு பாஜக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரானது. மீண்டும் அனுப்பினால் கவர்னர் கையெழுத்து போட வேண்டியதாக இருக்கும். ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அவர் சட்ட அமைச்சரையும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் இது சம்பந்தமாக பார்த்தது போல், ஆன்லைன் ரம்மி நிறுவனங்களையும் சந்தித்தார்.

ஆளுநர் ரவி அப்பழுக்கற்றவர். ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். அதற்காக நான் ஆளுநரின் செய்தியாளர் கிடையாது. நான் புரிந்து கொண்ட வரையில் கூறுகிறேன். ஆளுநரை அவதூறாக பேசுவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details