துணிவு vs வாரிசு - அண்ணாமலையின் அதிரடி பதில்! - திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் வாரிசு, துணிவு திரைப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை “விஜய், அஜித் இருவரையும் எனக்கு பிடிக்கும். நடிகர் அஜிதின் உழைப்பு அசாத்தியமானது. அதேபோல் நடிகர் விஜய் தமது நடிப்பை மிகச் சிறப்பாக மெருகேற்றி உள்ளார். வாரிசு அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். அரசியலில் துணிவாக இருந்து, வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் என்று இரண்டு தரப்பு ரசிகர்களுக்கு ஆதரவாக வழுப்பலாக பதில் அளித்தார்.