திமுக கட்சி நிதியில் பேனா சின்னம் வைக்க வேண்டும் - டிடிவி தினகரன் - திமுக
நீலகிரி மாவட்டம்குன்னூரில் நேற்று (பிப்.11) செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "திமுக கட்சி நிதியில் தேவையான அளவு பணம் இருப்பதால், பேனா சின்னத்திற்கான செலவை அரசின் நிதியில் இருந்து செய்யாமல், திமுக கட்சி நிதியில் செய்ய வேண்டும்.
பல எதிர்புகளுக்கு மத்தியில் இந்த பேனா சின்னத்தை கடலில் அமைக்காமல் கலைஞர் நினைவிடத்தில் அமைக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் போட்டியிடவில்லை. ஆனால், வரும் மக்களவை தேர்தலில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும், அது தேர்தல் ஆணைய விதிமுறையில் உள்ளது எனத் தெரிவித்தார்.