ஆம்பூர் ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா - திருப்பத்தூர்
திருப்பத்தூர்: ஆம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் மார்கழி மாத தேர்திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மேளதாளங்கள் முழுங்க கெங்கையம்மன் சிலை திருத்தேரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இத்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST