திருவண்ணாமலையில் சாமி தரிசனம் மேற்கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! - pongal release lal salaam
Published : Dec 13, 2023, 8:15 PM IST
திருவண்ணாமலை:நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான நேற்று(டிச.12) தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது உருவ படத்திற்கு பாலபிஷேகம், அன்னதானங்கள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். சாமி தரிசனம் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாரிக்கப்படும் லால் சலாம் படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று(டிச.12) வெளியான நிலையில் அதற்காகவும் சிறப்பு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தார். சில மாதங்களூக்கு முன்பு லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலைக்கு வருகை தந்தது குறிப்பிடதக்கது. மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, படம் வெற்றி பெற வேண்டியும் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.