ஜெயலலிதா நினைவு நாள்: உருவப்படத்தை பார்த்து கதறி அழுத அதிமுக தொண்டர்! - ஜெயலலிதாவின் நினைவு நாள்
Published : Dec 5, 2023, 11:10 PM IST
திருநெல்வேலி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். அந்த வகைநில் நெல்லை மாவட்டம் இராதாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராதாபுரம் மற்றும் இடிந்தகரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திரு உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இதேப் போன்று நெல்லை மாவட்ட கடற்கரை கிராமமான இடிந்தகரையிலும், அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், அதிமுக தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்தை பார்த்து கண்ணீர் மல்க கதறி அழுதார். மேலும், அவர் அம்மா, அம்மா என்று கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களையும் கண்கலங்கச் செய்த்து. தற்போது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.