தமிழ்நாடு

tamil nadu

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ETV Bharat / videos

ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்; திண்டுக்கல் சீனிவாசன் உளறல் - அதிமுகவினர் கதறல் - அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

By

Published : Jul 20, 2023, 4:17 PM IST

திண்டுக்கல்: தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியுள்ள வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திண்டுக்கல் நாகல் நகரில் இன்று 20.07.2023-ல் ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "தமிழகத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்குவோம்" என உளறி கொட்டினார்.

இதனை அருகில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லவே பின்னர் பதற்றம் அடைந்து, "அய்யயோ, நான் மாற்றி சொல்லி விட்டேன். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம்" என மீண்டும் பேசினார். இதனால் கூட்டத்தில் பங்கேற்ற ஆண்கள் பெண்கள் என அனைவரது மத்தியிலும் சிரிப்பலை ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details