தமிழ்நாடு

tamil nadu

’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

ETV Bharat / videos

”கட்சியின் கடைசி தொண்டனாக இருந்து முதலமைச்சர் இன்று இந்த நிலமைக்கு வந்துள்ளார்” - ஜிவி பிரகாஷ் புகழாரம்! - photo exhibition

By

Published : Apr 8, 2023, 10:45 PM IST

கோயம்புத்தூர்: வஉசி மைதானத்தில்  ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர். 

அப்போது புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு புகைப்படங்களின் நிகழ்வுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜிவி பிரகாஷ் கேட்டறிந்தார். பின்னர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதாரணமாக இந்த நிலைமைக்கு வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு கட்சியில் ஒரு கடைசி தொண்டனாக இந்த கட்சியில் இருந்து தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார். இதனை, அழகாக இந்த புகைப்பட கண்காட்சியின் எடுத்துக் கூறியுள்ளார்கள். 

இதன் மூலம் முதலமைச்சர் கடந்து வந்த பாதையை அனைவரும் அறிந்து கொள்ளலாம். மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காட்சிகள் என்னை கவர்ந்தது. அவரது இளம் வயதில் கிரிக்கெட் விளையாண்டது எல்லாம் என்னுடைய தலைமுறைக்கு தெரியாது. நம்முடைய முதலமைச்சரை பற்றி தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல இடமாக உள்ளது. அனைவரும் வந்து பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details