Video: உத்தரப் பிரதேசத்தில் கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பைக் - உத்தரப் பிரதேசம் மழை
உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 7) இரவு, சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் மழை நீர், ஆறு போல் ஓடின. இதில், ஜான்ஸி மாவட்டத்தின் நரியா பஜார் பகுதியில் உள்ள சாலையில் வேகமாக பாய்ந்து ஓடும் நீரில், இளைஞர் ஒருவர் தனது பைக்குடன் இழுத்து செல்லப்பட்டார். நல்வாய்ப்பாக, அங்கிருந்த உள்ளூர் மக்கள் அவரைக் காப்பாற்றிவிட்டனர். இருப்பினும், அதிவேகத்தில் சென்ற நீரில் அவரின் பைக் அடித்து செல்லப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST