4 மாதங்களுக்கு பிறகு கவியருவியில் குளிக்க அனுமதி - பொள்ளாச்சி கவி அருவி
கடந்த நான்கு மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் தடையை நீக்கியதால், தமிழ்நாடு, கேரளா உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வால்பாறை செல்லும் பொழுது கவியருவியில் குடும்பத்துடன் சென்று கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST