தமிழ்நாடு

tamil nadu

அம்பேத்கர்

ETV Bharat / videos

Ambedkar Jayanti: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்! - அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய ஈபிஎஸ்

By

Published : Apr 14, 2023, 12:53 PM IST

சேலம்:சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று(ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  அரசு கலைக்கல்லூரி சாலையிலிருந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த ஊர்வலத்தில் சேலத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற- நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றனர். அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், இந்தியத் தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அம்பேத்கர் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

இதையும் படிங்க: "நிலவில் இருந்து பார்த்தாலும் இனி தமிழ் தெரியும்" - அமைச்சர் மெய்யநாதன் அறிவித்த புதிய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details