தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்

ETV Bharat / videos

Actor Manobala : நடிகர் மனோபாலா மறைவு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் - நடிகர் மனோபாலா மறைவு

By

Published : May 3, 2023, 10:52 PM IST

சென்னை: தமிழ் திரைத்துறையின் பிரபலமான இயக்குநரும், தயாரிப்பாளரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா (69) இன்று (மே 03) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கல்லீரல் தொடர்பான பிரச்னையால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.  

சமீபத்தில் அவர் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோஸ்டி' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் நடித்து வந்தார். இந்தச் சூழலில் அவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனோபாலாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வர இயலாதவர்கள் தங்களது சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நகைச்சுவை நடிகர் போண்டா மணி, இயக்குநர் பேரரசு ஆகியோர் தங்களது இரங்கலை நேரில் வந்து தெரிவித்துள்ளனர்.  நாளை (மே 04) காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக மனோபாலாவின் மகன் ஹரிஷ் தெரிவித்துள்ளார். 

ABOUT THE AUTHOR

...view details