தமிழ்நாடு

tamil nadu

ஆம்பூர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடிகை ஷகிலா சாமி தரிசனம்!

ETV Bharat / videos

ஆம்பூர் ஆஞ்சநேயர் கோயிலில் நடிகை ஷகிலா சாமி தரிசனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 11:08 AM IST

திருப்பத்தூர்:பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையான ஷகிலா, மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர். இதனிடையே, மலையாள திரைத் துறையில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய பின், தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். 

தமிழ் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பலரது மனங்களை கவர்ந்து, தமிழகத்தில் வாழ்ந்து வந்தார். பின், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இவர் அனைவரது மனங்களையும் கவர்ந்தார். தற்போது ஷகிலா ஆன்மிக பயணமாக, பல கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், ஆம்பூரில் உள்ள அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் கோயிலில், ஷகிலா தனது குடும்பத்துடன் நேற்று (நவ.23) சாமி தரிசனம் செய்தார்.

புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆம்பூர் மட்டுமல்லாது சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும், இந்த ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details