தமிழ்நாடு

tamil nadu

மணிரத்னம்

ETV Bharat / videos

"மணிரத்னம் என்றாலே Nothing Less Than Better தான்" - நடிகை பிரியா பவானி சங்கர் - ps2 release date in india

By

Published : Apr 23, 2023, 3:43 PM IST

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதி என்பவர் மருதமலை பகுதியில் புதிதாக கட்டியுள்ள Nivetha Grand என்ற ஹோட்டலின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை பிரியா பவானிசங்கர் ஹோட்டலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரியா பவானி சங்கர், 'பட்ஜெட் குறைவான நல்ல படங்களுக்கும் வரவேற்பு கிடைப்பது ஆரோக்கியமான விஷயம் தான்’என்று கூறினார். மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, 'இயக்குநர் மணிரத்னம் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும், Nothing less than Better தான்' என்று தெரிவித்தார்.  

மேலும் அவர், 'படம் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியும். நாம் என்ன அனுபவிக்கப் போகிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும்' என பதிலளித்தார். கோயம்புத்தூர் அனைவருக்கும் பிடித்த ஊர் என தெரிவித்த அவர் சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் உள்ள ஒரு Vibe தான் கோயம்புத்தூர் என்றார். மேலும், தற்போது கோயம்புத்தூரில் வெயில் அதிகமாக தான் உள்ளது எனக் கூறிய அவர், சென்னையைக் காட்டிலும் கோயம்புத்தூரில் குறைவாகத்தான் வெயில் உள்ளது எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்தமுறை வரும்பொழுது இங்கு தங்குவதுபோல் வருகை புரிய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மருதமலை சேனாதிபதி, கவுன்சிலராக உள்ள அவரது மகள் நிவேதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை சீர்செய்து ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details