பழனி முருகன் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்! - dindigul
திண்டுக்கல்:பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு இன்று (ஆகஸ்ட். 15) நடிகர் யோகி பாபு வருகை தந்தார். ரோப் கார் மூலமாக சென்ற அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு விட்டு நடிகர் யோகி பாபு மலை அடிவாரத்திற்கு வருகை தந்தார். அதன் பின் திரு ஆவினன்குடி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கு இருந்த வெள்ளி கடையில் அவருக்கு தேவையான பொருட்களை வாங்கினார். யோகி பாபு வருகையை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் புகைப்படம் எடுக்க அவரை சூழ்ந்து கொண்டனர். நடிகர் யோகி பாபுவுடன் பொது மக்கள் செல்பி எடுத்து கொண்டனர். இதே போல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை நடிகர் யோகி பாபு வழக்கமாக கொண்டுள்ளார்
நடிகர் யோகி பாபு சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் நடித்தார். ஜெயிலர் படத்தில் இவரது நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது ஜவான், கருமேகங்கள் கலைகிறது, அயலான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.