Actor Yogi Babu: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்! - Actor Yogi Babu darshan at Kashi Vishwanath Temple
Published : Sep 12, 2023, 10:06 AM IST
தென்காசி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். தமிழ் திரையுலகத்தின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தீவிர ஆன்மீகவாதியான நடிகர் யோகி பாபு அண்மைக்காலமாக பல்வேறு கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (செப். 11) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சென்ற நடிகர் யோகி பாபு ஆருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து, நடிகர் யோகி பாபு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்றார். தொடர்ந்து, தென்காசி மாவட்டத்திலேயே ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்ற அவர் காசி விஸ்வநாதர், உலகம்மன், பாலமுருகன் உள்ளிட்ட அனைத்து சாமி சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
நடிகர் யோகி பாபுவை பார்க்க ஏராளமான பொதுமக்கள் காசி விசுவநாத கோயில் சன்னதியில் திரண்டனர். தொடர்ந்து அவரை சூழ்ந்த ரசிகர்கள் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.