திருப்பத்தூர் விஜய் மக்கள் இயக்கம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்! - Tirupathur
திருப்பத்தூர்:தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஜய் பிறந்தநாள் கடந்த ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகத் இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் நடிகர் விஜயின் 49 ஆவது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் மூர்த்தி மற்றும் மாதனூர் ஒன்றிய தலைவர் குமரேசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனையடுத்து துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குத் தையல் இயந்திரம், புடவைகள் வழங்கப்பட்டது.
மேலும் துத்திப்பட்டு ஊராட்சியில் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ள பகுதிகளுக்குக் கொசு மருந்து அடிக்கும் இயந்திரம், மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா, போன்ற கல்வி உபகரணங்களும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச காக்கிச்சட்டை என 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.இதனையடுத்து பொது மக்களுக்கு பிரியாணியுடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க :மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்.