தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

ETV Bharat / videos

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள். - tn actor

By

Published : Jun 26, 2023, 4:50 PM IST

மயிலாடுதுறை: நடிகர் விஜய்யின் 49-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம்  சேத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு  ரூ.30,000 மதிப்பீட்டில் பேனா, பென்சில், க்ரையான்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்.

இதனையடுத்து மயிலாடுதுறை ஒன்றியத்துக்கு உட்பட்ட  சேத்தூர் கிராமம் மற்றும் பருத்திக்குடி கிராமங்களுக்கு இலவசமாக வயல்களில் உரம் தெளிக்கும் ஸ்பிரேயர் வழங்கினார்.மேலும்  விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தரப்படும் ஸ்பிரேயர் மெஷின்  தேவை அதிகரித்தால் மீண்டும் புதிதாக மெஷின்கள் வழங்கப்படும்  என்று தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் குட்டிகோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் ,விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதையும் படிங்க :போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details