வைகைப்புயலை சூழ்ந்த மகளிர் புயல் - புகைப்படக் கண்காட்சி
மதுரை திருப்பாலை மேனேந்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சி தொடங்கி உள்ளது. இந்த புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று (மார்ச் 19) புகைப்படக் கண்காட்சி திறந்து வைத்தனர். இதையடுத்து ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த புகைப்படக் கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டார்.
அந்த நேரத்தில் புகைப்படக் கண்காட்சிக்கு வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வடிவேலுவை கண்ட உடன் ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டனர். இவர்களை கண்ட வடிவேலு அவர்களுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது மகளிர் கூட்டம் வடிவேலுவை சூழந்தது. வடிவேலுவும் அவர்களிடம் தனது பாணியில் கை அசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000.?