தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

ETV Bharat / videos

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து! - திமுக

By

Published : Feb 28, 2023, 3:10 PM IST

திமுக தலைவரும், தமிழ்நாடு‌ முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 1) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு நடத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் மார்ச் மாதம் முழுவதும் நகரம், ஒன்றியம், பேரூர் கழகங்கள் வாரியாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட‌ உள்ளன.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. இதனை நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ பிறந்தநாளையொட்டி வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அதில், ''எனது இனிய நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவரது 70வது பிறந்தநாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details