தமிழ்நாடு

tamil nadu

நடிகர் மனோபாலா இறுதி ஊர்வலம்

ETV Bharat / videos

Manobala Funeral: நடிகர் மனோபாலா இறுதி ஊர்வலம் - கண்ணீர்விட்ட மக்கள்! - இறுதி ஊர்வலம்

By

Published : May 4, 2023, 4:31 PM IST

சென்னை: தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (மே.04) உயிரிழந்தார். கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாய கங்கை' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா, 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி உள்ளார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் 'புதிய வார்ப்புகள்' படம் மூலம் உதவி இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கிய மனோபாலா பின்னாட்களில் குடும்பப் படங்களையும், ஜனரஞ்சகமான காதல் படங்களையும் வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 

நடிகர் மனோபாலா மறைவுக்கு திரைத்துறைப் பிரபங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

மனோபாலாவின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்ற நிலையில் அதில், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, கோவை சரளா, பசுபதி, ரவிமரியா, உதயா, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வழி நெடுக பொதுமக்கள் மனோபாலா உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மனோபாலா உடல் வளசரவாக்கம் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:Manobala Funeral: நடிகர் மனோபாலா இறுதி ஊர்வலம்!

ABOUT THE AUTHOR

...view details