தமிழ்நாடு

tamil nadu

Actor Jeeva CCL

ETV Bharat / videos

தமிழ்ப்படங்களின் வெற்றிக்கு இதுதான் காரணம் - ரகசியத்தை இந்தியில் சொன்ன ஜீவா - சென்னை ரைனோஸ்

By

Published : Feb 17, 2023, 6:59 PM IST

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நாளை (பிப்.18) நடைபெறவுள்ள நிலையில் சென்னை ரைனோஸ் அணி ராய்ப்பூரை சென்றடைந்தது. நாளை மும்பை ஹீரோஸ் அணியுடன்  சென்னை ரைனோஸ் அணி மோதவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சென்னை அணியின் ஆல்ரவுண்டர் வீரரான நடிகர் ஜீவா நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது, தென்னிந்திய திரைப்படங்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். தென்னிந்திய தொழில் மீது மக்களின் மோகம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? என ராய்ப்பூரில் உள்ள ஈடிவி பாரத் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜீவா, ''அப்படியல்ல, 1000 கோடி ரூபாய் வசூல் செய்த பதான் படம் பாலிவுட்டிலும் ஓடிக்கொண்டிருக்கிறது, நல்ல உள்ளடக்கம் மற்றும் டைமிங்கும் அவசியம்.  எல்லா தென் திரைப்படங்களும் நன்றாக அமையாது. தென்னிந்தியாவில் 500 படங்கள் வெளியானால், 5 படங்கள்தான் ஹிட் ஆகும்.  

தென்னிந்திய படங்களில் உணர்வுபூர்வமான அம்சங்கள் அதிகம் இருக்கும். மண் சார்ந்த கதைகள் எடுக்கப்படுகிறது. இதனால் எல்லோரும் அதனுடன் தொடர்புபடுத்திக்கொள்கின்றனர். தென்னிந்தியாவில் எல்லா வகுப்பிலும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இதனுடன், டப்பிங் தொழில்களும் மிகவும் சிறப்பாக உள்ளன. இதன் காரணமாக எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது'' என்றார்.

இதையும் படிங்க:Celebrity Cricket League: எட்டு திரையுலகம் களம்காணும் கிரிக்கெட் போட்டி

ABOUT THE AUTHOR

...view details