நீர்வரத்து இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட குளம்.. எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை..
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட கரடிபொட்டல் பகுதியில் மத்திய அரசின் அம்ரித் சரோவர் திட்டத்தில் 15ஆவது நிதி குழு நிதி ஒதுக்கீட்டில் கீழவடகரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக 5 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் சிறிய குளம் வெட்டப்பட்டுள்ளது. இந்தக் குளம் வெட்டப்பட்ட இடமானது நீர் வரத்து வாய்க்கால், ஓடை, எதுவும் இல்லாத உயரமான பகுதி என்பதால் மழைக்காலங்களில் கூட தண்ணீர் வந்து சேராத நிலையில் ஏற்பட்டுள்ளது.
இந்த குளம் வெட்டப்பட்டது குறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், நீர் வரத்தே இல்லாத உயரமான இடத்தில் குளத்தை வெட்டி அரசு பணத்தை வீணடித்து உள்ளதாகவும், வெட்டப்பட்ட இடத்திற்கு எந்த நீரும் வராத நிலையில் இதானால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். வெட்டப்பட்ட குளத்திற்கு நீர் கொண்டு வர வேண்டும் என்றால் அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செலும்பு ஆற்றில் இருந்து குழாய் அல்லது வாய்க்கால் வெட்டி நீர் கொண்டு வந்து குளத்தில் தேய்க்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் நீர் வரத்து இல்லாத இடத்தில் விவசாயிகளுக்கு பயனற்ற முறையில் வெட்டப்பட்ட குளத்தில் நீர் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க:5 மணிநேரம் வெறும் கையில் தீச்சட்டியுடன் நடனம்.. தேனி பகவதி அம்மன் கோயில் விழா கோலாகலம்!