தமிழ்நாடு

tamil nadu

கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி விபத்து

ETV Bharat / videos

கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி; கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி - தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

By

Published : Mar 26, 2023, 2:48 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த தசரதன் (32), கனரக லாரி ஓட்டுநரான இவர் எம் சாண்ட், ஜல்லி போன்றவையை கட்டுமானப் பணிகளுக்காக தினந்தோறும் பெங்களூருக்கு எடுத்துச்செல்வது வழக்கம். வழக்கம்போல் ஜல்லியை ஏற்றிச்சென்று விட்டு, மீண்டும் லாரியை ஓசூர் நோக்கி அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி வந்துள்ளார். அப்போது தர்கா என்னுமிடத்தில் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருந்த தடுப்பு கம்பிகளில் மீது மோதியுள்ளது. 

சாலையில் சென்ற தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய சினிமா போன்ற பரபரப்பு காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரவிவருகின்றது. லாரி, கார் மீது மோதி கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதால், லாரி டிரைவர் தசரதன் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி கலையரசன் ஆகிய இருவருக்கும் கை, கால் முறிந்துள்ளது. மேலும் இந்நிலையில் அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்தக் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கும் வகையில் உள்ளது. தடுப்பு மீது மோதாமல் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியிருந்தால் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்ப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும். நல்வாய்ப்பாக பல உயிர்கள் தப்பி உள்ளது என அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். 

ABOUT THE AUTHOR

...view details