கிளையில் இலையே இல்லை ஆனால் 100 மாங்காய்.. 'ஏய் எப்புரா' என வியக்க வைத்த அதிசய மாமரம்! - mango tree
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜபேட்டையில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் உள்ள மாமரத்தின் சிறிய கிளை ஒன்றில் இலைகளே இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட மாங்கனிகள் காய்த்துள்ளன.
பொதுவாக தென்னை மரத்தில் மொத்தமாக 100 தேங்காய் ஒரே கொத்தாக தொங்கும், இது இயல்பான ஒன்று. ஆனால் மாமரத்தில் இது போன்று ஒரே கிளையில் 100க்கு மேற்பட்ட மாங்காய் காய்த்து தொங்குவது அரிதாக உள்ளது. இந்த நிகழ்வை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
மேலும், அந்த மாமரத் தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தாலும், இது போல் ஒரே கிளையில் 100 மாங்காய் கொத்துக் கொத்தாக தொங்குவது இந்த ஒரு மரத்தில் மட்டும் தான். ஆகையால் அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாமரத்தின் முன்பு பலரும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க: Rasi Palan: சிம்ம ராசிக்கு கவனம்.. உங்க ராசிக்கான இன்றைய பலன் என்ன?