கோடையை குளிர்படுத்தும் மாங்காய் பானம் செய்முறை... - homemade summer drinks
கோடை காலத்தில் சிறந்த குளிர்பாமனான மாங்காய் பானம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த பானத்தில் இருக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இது தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், நமது உடலின் இரைப்பை, குடல் பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும் தன்மை கொண்டது. இது சோடியம் குளோரைடு (உப்பு) மற்றும் இரும்புச் சத்து இழப்பைத் தடுக்கிறது. மேலும் காசநோய், ரத்த சோகை, காலரா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கும். இதை எளிதாக மூன்றே நிலைகளில் செய்யலாம். இதற்கு மாங்காய், வெல்லம் / சர்க்கரை மற்றும் ஏலக்காய் ஆகியவை தேவை. மாங்காய் பானத்திற்கான எங்களின் செய்முறையை முயற்சித்து பாருங்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST