தமிழ்நாடு

tamil nadu

ஆடி அமாவாசை

ETV Bharat / videos

ஆடி அமாவாசை: பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்!! - கோவை மாவட்ட செய்தி

By

Published : Jul 17, 2023, 1:49 PM IST

கோவை:இந்த ஆண்டு ஆடி முதல் நாள் திங்கட்கிழமை அமாவாசை நாளாக அமைந்துள்ளது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பொதுவாக அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் மூதாதையர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். ஆடி அமாவாசை நாளான இன்று ஏராளமான கோயில்களில் தர்ப்பணம் அளித்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் பேரூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தர்ப்பணம் அளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரூர் படித்துறையில் தங்கள் மூதாதையர்களுக்கு மக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்த வருடம் மழைப் பொழிவு இல்லாததால் ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இதன் காரணமாக ஆங்காங்கே கோயில் நிர்வாகம் தர்ப்பணம் தருவோர் குளிக்க வசதி செய்து கொடுத்து உள்ளது. இங்கு கோவை மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை புரிவதால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிபதி என்பது பதவி அல்ல.. அது ஒரு பொறுப்பு - உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன்

ABOUT THE AUTHOR

...view details