தமிழ்நாடு

tamil nadu

நூதன முறையில் செல்போன் கடையில் பண மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்

ETV Bharat / videos

நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் - கையும் களவுமாக சிக்கியது எப்படி? - woman involved in money fraud

By

Published : Jul 27, 2023, 7:08 PM IST

சென்னை:ஊரப்பாக்கம் அடுத்த அய்யன்சேரி பகுதியைச் சேர்ந்தவர், ஷெரில் (எ) கன்சால்வெஸ்‌ (20). இவர் சென்னையின் பிரபல தனியார் கல்லூரியில் படித்த பட்டதாரி எனக் கூறி தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளில், தனக்கு உடனடி மருத்துவத் தேவை இருப்பதாகக் கூறி,  தான் சொல்லும் எண்ணிற்கு பணம் பரிவர்த்தனை செய்யுமாறு கூறுகிறார்.

அந்த பணத்தை கையில் கொடுக்காமல், ஜிபே போன்ற செயலியின் மூலம் கியூ.ஆர் ஸ்கேன் செய்து பணத்தை அனுப்புவதாகச் சொல்லி, போலியான செல்போன் ஸ்கிரீன் ஸாட்டை காண்பித்துவிட்டு, காதலன் தயாராக இருப்பதாகக் கூறி, இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுவிடுகிறார்.

இதே பாணியில் தாம்பரத்தில் உள்ள செல்போன் கடையில் ஏமாற்ற முயன்ற போது கையும் களவுமாக சிக்கியவர்களை, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் ஷெரில் (எ) கன்சால்வெஸ்‌ என்பதும், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பதும், தற்போது ஊரப்பாக்கத்தில் தனது சகோதரனுடன் தங்கி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் இரண்டு மாதத்திற்கு முன்பாக சேலத்தில் இதே போன்ற நூதனத் திருட்டில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளம் பெண்ணின் மோசடியில், தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து இனி தான் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details