பதறவைக்கும் வீடியோ - இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரின் அட்டகாசம் - குற்றச் செய்திகள்
திண்டுக்கல்:வேடசந்தூர் அருகேவுள்ள தட்டாரபட்டியில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் வீட்டு முன்பு குளித்துக் கொண்டிருந்ததை இளைஞர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம் பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர். பெண்களின் உறவினர்கள் இளைஞரை தட்டி கேட்டதால் இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று, தனது ஊரைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து விறகு கட்டையால் பெண்கள் மற்றும் ஆண்களைத் தாக்கினார். இதனால் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனர்.