Viral video - கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த இளைஞர் - கஞ்சா போதையில் இளைஞர் ரகளை
சென்னை: மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமங்கலம் பாடி குப்பம் பகுதியில் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இளைஞரை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது. மேலும், கஞ்சா போதையில் இளைஞர்கள் அடிக்கடி ரகளை செய்துவருவதாகவும் காவல் துறை இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST