வீடியோ: ஊருக்குள் புகுந்த காட்டுயானை பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு - கோவை
கோவை மாவட்டம் மருதமலை மற்றும் பெரிய தடாகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் ஆண் காட்டு யானை ஒன்று ஆனைகட்டி செல்லும் சாலைக்கு இன்று வந்தது. அப்போது யானையை வேடிக்கை பார்த்தவர்களை திடீரென விரட்டியது. தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் யானையை மீண்டும் கணுவாய் வனப்பகுதிக்குள் விரட்டினர். தாடகம் பகுதியில் செயல்படாமல் இருந்து செங்கல்சூளை மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது. இதனால் வாகனங்களில் போக்குவரத்து அதிகரிப்பினால், அங்குள்ள யானைகள் ஊருக்குள் புகுந்துவருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST