எனக்கு கவலையே இல்லை... போதையில் கழிவுநீரில் படுத்து மதுப்பிரியர் அட்டகாசம்! - Sewage water
திண்டுக்கல்:வேடசந்தூர் குடகனாறு பாலத்தின் அருகே ஆற்றுக்குள் வரும் கழிவு நீரில் ஒருவர் ஹாயாக படுத்துக் கிடந்தார். இதனைக்கண்ட சமூக ஆர்வலர்கள் அருகில் சென்று பார்த்தபோது அவர் அளவு கடந்த மதுபோதையிலிருந்தது தெரியவந்தது.
அவரிடம் நீங்கள் யார்? ஏன் இங்க படுத்துருக்கிங்க என கேட்டபோது, "திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சக்திவேல். பெயிண்டர் வேலை பார்த்து வருகிறேன். மது அருந்திவிட்டு வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீரில் படுத்திருக்கிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம் நான் தில்லாக வந்து தூங்குறேன். நீங்க ஜாலியா என்னை வந்து பேட்டி எடுக்கலாம் என்றார்.
மேலும், என் பெயர் வேடசந்தூர் முழுவதும் வரவேண்டும், அலெக்சாண்டர் மாதிரி வேடசந்தூரில் எனது பெயர் வரவேண்டும். நான் தற்கொலை செய்வதற்காக வரவில்லை. சும்மா ஜாலியாக என்ஜாய் பண்ண படுத்திருக்கிறேன். இயற்கை காட்சியில் படுத்திருக்கேன், நிம்மதியா தூங்குறேன். எனக்கு இயற்கை தான் ரொம்ப பிடிக்கும். அதனால் ரிலாக்சா தூங்குறேன்.
அவுட்டர்ல படுத்திருக்கேன், நல்லா என்ஜாய் பன்றேன். இதவிட என்ஜாய் எனக்கு தெரியல, நிம்மதியா தூங்குறேன். கடவுள் எனக்கு நிம்மதிய குடுத்திருக்காரு, வணக்கம் சொல்லனும் கடவுளுக்கு. கடவுள் திருப்தியா மனுசன வாழ வைக்கிறாரு". என்று உளறிக்கொண்டு கழிவுநீரிலேயே படுத்து உறங்கினார். இந்த காட்சி அந்த வழியே சென்றவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.