இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தை: பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி! - வனத்துறை
நீலகிரி சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் வருவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதே போல உதகையை அடுத்த அகலார் தூனேரி பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் இரவு நேரங்களில் உலா வரும் இந்த சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது சிறுத்தை கேசுலாக வாக் வரும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.