Video: உணவைத் தேடி தருமபுரி நகர் பகுதிக்கு படையெடுத்த மயில் கூட்டம்! - மயில் கூட்டங்கள்
தருமபுரி மாவட்டம், விவசாயம் நிறைந்த மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, அரூர்,பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை ஒட்டியுள்ள விளை நிலங்களில் மயில் கூட்டமாக திரிவதை அடிக்கடி காண முடியும். ஆனால், தற்போது கோடைக்காலம் துவங்கும் தருணம் என்பதால் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, மயில்கள் காடுகளில் இருந்து வெளியேறி நகர் பகுதிக்கும் வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தருமபுரி நகர்ப்புறப் பகுதியை ஒட்டி உள்ள அன்னசாகரம், எரங்காட்டு, கொட்டாய் மற்றும் தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள குமாரசாமிபேட்டை உள்ளிட்ட நகரப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் மயில்கள் உணவு தேடி வருவது சில நாட்களாக வாடிக்கையாகி உள்ளது. அதனை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.