தமிழ்நாடு

tamil nadu

பாரளை எஸ்டேட் பகுதியில் பலா மரத்தில் யானை ஏரி பழத்தை பறிக்கும் வீடியோ வைரல்!

ETV Bharat / videos

Viral: பாரளை எஸ்டேட் பகுதியில் பலா மரத்தில் ஏறி பழத்தை பறிக்கும் யானை - tamil news

By

Published : May 15, 2023, 4:01 PM IST

கோயம்புத்தூர்:வால்பாறையை அடுத்த ஆனைமலைப் புலிகள் காப்பக வால்பாறை வனத்துறை பகுதிக்கு உட்பட்ட பாரளை எஸ்டேட் பகுதி ஒன்று உள்ளது. அதை ஒட்டி 10 ஏக்கர் அளவிலான குடியிருப்புக்கு அருகில், உள்ள பலா மரத்தில் யானை ஏறி பலாப்பழத்தை பறிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தற்போது வால்பாறைப் பகுதியில் நிரந்தரமாக உள்ள யானைகள் எண்ணிக்கை சுமார் ஐந்து. 

அதில் தன்னந்தனியாக திரியும் யானை ஒன்று அப்பகுதியில் உள்ள பலாமரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிக்கும் அரிய வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ள இந்த கால கட்டத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் அதிக அளவில் பலா மரங்கள் உள்ளன. 

ஆண்டுதோறும் இந்தப் பழத்தை தின்பதற்காகவே இந்த பகுதியில் உள்ள யானைகள் நிரந்தரமாக இங்கு தங்கி விடுகின்றன. தற்போது இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் சாலையை அடிக்கடி கடந்து செல்வதால், வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவரும் யானை வரும் வழியில் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

இதையும் படிங்க:Thiruvalluvar University: குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் திருவள்ளூர் பல்கலைக்கழகம்.. வேலூரில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details