தமிழ்நாடு

tamil nadu

குட்டிகளை முதுகில் வைத்து சவாரி சென்ற கரடி ! வைரலாகும் வீடியோ

ETV Bharat / videos

Viral Video: குட்டிகளை முதுகில் வைத்து சவாரி செய்த தாய்மையுள்ள கரடி - The Nilgiris district news

By

Published : Jul 5, 2023, 4:15 PM IST

நீலகிரி:  நீலகிரிமாவட்டம், முதுமலைப் புலிகள் காப்பகம் பகுதியில் சிங்காரா செல்லும் சாலையில் குட்டிகளை முதுகில் சுமந்தபடி கரடி ஒன்று சாலையைக் கடந்து சென்றதைக் கண்ட வாகன ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு வீடியோ எடுத்துள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம், சிங்காரா, மாயார் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சாலைகள் வனப்பகுதியைக் கொண்டுள்ளது. அதனால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்கள் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் வனவிலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன.

இந்த நிலையில் சிங்காரா செல்லும் சாலையில் குட்டிகளை முதுகில் சுமந்து கொண்டு கரடி ஒன்று தாய்மையுணர்வுடன் சாலையைக் கடந்து சென்றது. அப்போது அச்சாலை வழியாக சென்ற வாகன முகப்பு வெளிச்சத்தைக் கண்டவுடன் வேகமாக தனது குட்டிகளை சுமந்து, வனப்பகுதிக்குள் சென்றது. கரடி நடந்து செல்லும் வீடியோ காட்சிகளை வாகனத்தில் இருந்து ஓட்டுநர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .மேலும் இப்பகுதியில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டுமென வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details